_மார்ச் 19: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

Published On:

| By Balaji

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தை மார்ச் 19ஆம் தேதி வைத்துக்கொள்ளத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கான வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 34ஆவது கூட்டத்தை மார்ச் 19ஆம் தேதி நடத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் பிறகு அனைத்து மாநில அரசுகளுக்கும் கூட்டம் தொடர்பான நோட்டீஸ்கள் ஜிஎஸ்டி கவுன்சில் தலைமைச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 19 அன்று நடைபெறும் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொண்ட வரிக் குறைப்பின் விளைவுகள் மற்றும் அதில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் ஜிஎஸ்டியின் கீழ் அரசின் வரி வருவாய் குறைந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.97,247 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஜனவரி மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கும் ரூ.13.71 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.47 லட்சம் கோடியாகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share