அடோப் ஃபிளாஷ் பயன்படுத்தும் பொழுது பயனர்கள் தகவல்கள் திருடப்படுவதாக தென் கொரியாவை சேர்ந்த பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அடோப் நிறுவனம் ஃபிளாஷ் குறித்த செயலிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. எனவே பெரும்பாலான ஃபிளாஷ் சாப்ட்வேர் கொண்டு செயல்படும் கணினிகளில் இந்த அடோப் ஃபிளாஷ் பிளேயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் பயனர்களின் கணினிகளை ஆன்லைன் மூலம் இயக்கம் (Remote Code Execution) RCE எனப்படும் ஒரு வசதி உள்ளதாக தென் கொரியாவை சேர்ந்த பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான பைல்களை கணினிகளில் சேமித்து வைக்கும் பொழுது, அதனை உலகின் எந்த இடத்தில் இருந்தும் ஹேக்கர்ஸ்கள் எளிதில் பெற முடியும். அதுமட்டுமின்றி பயனர்களின் உதவியின்றி கணினியை இயக்கவும் முடியும்.
எனவே இந்த முறை பாதுகாப்பாற்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள அடோப் ஃபிளாஷ் நிறுவனம் இதற்கு விரைவில் தீர்வு கண்டு அப்டேட் ஒன்றினை வெளியிடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
�,