_பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!

public

கர்நாடகாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று ஏப்ரல் 21ஆம் தேதி காலை நான்கு மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் இருந்து தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்துக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், கர்நாடக மாநிலம் பால்கி என்ற பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ரயில் என்ஜின் உட்பட இரு பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு உயிர்ச்சேதம் ஏதும் எற்படவில்லை. இருப்பினும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள், தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் ரயில் தடம்புரண்டதால் பால்கி பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் எண் 57547 ஹைதராபாத்-புர்னா பயணிகள் ரயில் இன்று ஏப்ரல் 21ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாய்நகர் சிரிதி – காக்கிநாடா செல்லக்கூடிய பயணிகள் ரயில் (17205) பர்பானி, பூர்ணா, நாந்தேட், நிசாமாபாத் மற்றும் செகந்திராபாத் வழியாக இயக்கப்படும். நந்த்தே-பெங்களூரு செல்லக்கூடிய பயணிகள் ரயில் (16593) முட்கேத், நந்தேட், நிசாமாபாத், செகந்திராபாத் மற்றும் விக்கராபாத் வழியாக இயக்கப்படும். புர்னா-ஹைதராபாத் பயணிகள் ரயில் (57548) முட்கேத், நந்தேட், நிஜாமாபாத் மற்றும் செகந்திராபாத் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் இயக்கம் பற்றிய தகவல்கள் அறிய உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹைதராபாத்- 040-23200865, பாலி – 02446-223540, விக்ராபாத் – 08416-252013, பிடார் – 08482-226329, ஔரங்காபாத் – 02402342034 மற்றும் பால்கி – 084842622209, 07899930073 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு ரயில்கள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம், உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் அருகே ராம்ராணி எக்ஸ்பிரஸின் எட்டுப் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது, கடந்த மார்ச் மாதம், டெல்லி மஹரகேஷால் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 50 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *