தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்காக தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பலைகள் கிளம்பின. இந்நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு நேஷனல் எக்சிட் டெஸ்ட் எனப்படும் ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இன்று (ஜூலை 19) பாராளுமன்ற வளாகம், காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள், நீட் தேர்வையும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். மருத்துவ மாணவர்களின் கனவுகளை சிதைக்கக் கூடாது போன்ற முழக்கங்களைக் கொண்ட பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நெக்ஸ்ட் தேர்வு கொண்டு வருவதால் மருத்துவ மாணவர்களின் கனவு சிதையும். இந்த தேர்வினை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
“மருத்துவப் படிப்புகள் முடியும் தருணத்தில் நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வுகளை மத்திய அரசு நடத்துவது, மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல்” என்று குறிப்பிட்டு பேசியவர், இந்த தேர்வின் மூலம் மாநிலங்களில் உள்ள அரசு கல்லூரிகளை மத்திய அரசு இயக்கக்கூடிய சூழல் ஏற்படும். இதனால் தமிழக அரசு இதனை எதிர்க்க வேண்டும் என கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார். ஏற்கனவே, 2016ம் ஆண்டு தேசிய மருத்துவர்கள் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே, நாடாளுமன்றத்தில் அதிமுக இதனை எதிர்த்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய கொள்கையை அரசு ஏற்றுக்கொள்வதாகவும், தேசிய மருத்துவ கழக (நெக்ஸ்ட்) மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”