_தேர்தல் விவாதம்: ட்விட்டரில் சாதனை!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு பணிகள் நிறைவடைந்து மே 23ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை மக்களவைத் தொடர்பாக 39.6 கோடி உரையாடல்கள் ட்விட்டரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களை விட 600 விழுக்காடு அதிகமாகும்.

தேர்தல் நேரத்தில் எந்தெந்த விவகாரங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய பட்டியலையும் ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. தேசப் பாதுகாப்பே அதிகம் பேசப்பட்ட விவகாரமாக முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் மதமும், மூன்றாம் இடத்தில் வேலைவாய்ப்புகளும், நான்காம் இடத்தில் விவசாயமும், ஐந்தாம் இடத்தில் பணமதிப்பழிப்பும் இருப்பதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக குறிப்பிடப்பட்ட நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பெரும்பாலான உரையாடல்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலேயே இருந்தாலும், தமிழ் உரையாடல்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தி மொழி இருக்கிறது.

மேலும் ட்விட்டர் இந்தியாவின் அறிக்கையில், “தேர்தல் நடத்தை விதிகளை நாங்கள் கடைப்பிடித்துள்ளோம். அத்துடன் பிரச்சினைகள் குறித்து தகவல் அளிப்பதற்கு நேரடியாக வழிவகை செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் தேர்தல் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டால் அவை குறித்து நேரடியாக புகாரளிக்க சிறப்பு அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையையும் அதிகரித்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

**

[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share