சென்னையில் உள்ள கொரட்டூர், அயப்பாக்கம், திருநீர்மலை ஏரிகளில் நீர் எடுக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது மெட்ரோ குடிநீர் வாரியம்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழைப்பொழிவு குறைந்ததால், இவற்றின் நீர் இருப்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. சென்னை வட்டாரத்தில் 13 ஏரிகள் இருந்தாலும், சிலவற்றில் கழிவுநீர் கலப்பதாகச் சில ஆண்டுகளாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது மெட்ரோ குடிநீர் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரட்டூர், அயப்பாக்கம், திருநீர்மலை ஏரிகளில் இருக்கும் நீர் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஏரிகளில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் கழிவு நீரால் இந்த ஏரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பத்தூர் மற்றும் அதன் அருகிலுள்ள தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலைக் கழிவுகளால் கொரட்டூர், அயப்பாக்கம் ஏரிகள் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, திருநீர்மலை ஏரிப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அந்த ஏரி முற்றிலுமாக மாசுபடுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”