சர்க்கரை உற்பத்தியில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்திவரும் நாடான பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
*னைட்டட் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் ஆப் அக்ரிகல்சர்ஸ் ஃபாரின் அக்ரிகல்சர் சர்வீஸ் (USDA)* வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய நாடுகள் அதிக ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து, விளைச்சலை அதிகப்படுத்தியிருப்பதால் இந்தச் சர்க்கரைப் பருவத்தில் அதன் உற்பத்தி 5.2 விழுக்காடு உயர்ந்து 35.9 மில்லியன் டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் எத்தனால் தயாரிக்க கரும்பைப் பயன்படுத்தும் முறைக்கு பிரேசில் திரும்பியதால், அதன் சர்க்கரை உற்பத்தியில் 21 விழுக்காடு குறைந்து 30.6 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், தாய்லாந்து போன்ற நாடுகள் சர்க்கரை உற்பத்தியில் தங்களது ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டுள்ளன. இதன் தாக்கத்தால் சர்வதேச சர்க்கரை உற்பத்தி 4.5 விழுக்காடு வீழ்ச்சியடைந்து 185.9 மில்லியன் டன்னாகச் சரிந்துள்ளது. சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், இந்தியாவில் அதிகரித்துள்ள சர்க்கரை இருப்பால் சர்வதேச அளவில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.�,