�வீட்டிலிருந்து வேலை செய்கிற இந்த நாள்களில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் நொறுக்குத் தீனிகளைத் தேடுவதைத் தவிர்க்க முடியவில்லையே என்பவர்கள் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்த்து, இந்த லட்டைச் செய்து சாப்பிடலாம். இந்த லட்டு சருமத்தைப் பளபளப்பாக்குவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கும் பலம் கொடுக்கும்.
**என்ன தேவை?**
சத்து மாவு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப் (பொடித்தது)
நெய் – 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு – சிறிதளவு
பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு – சிறிதளவு
பொடியாக நறுக்கிய உலர் திராட்சை – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
கோதுமை மாவு, கம்பு, சோளம், ராகி, திணை, சாமை என்று எல்லாமே கலந்த சத்து மாவை வாங்கிக்கொள்ளவும். பின்னர் சத்து மாவு, பொடித்த வெல்லம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் உலர் திராட்சையையும், பருப்புகளையும் சேர்த்துக் கலக்கவும். நெய்யைச் சூடாக்கி அதை இந்த மாவுக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொண்டே மாவை லட்டுகளாகப் பிடிக்கவும். வெல்லமும் நெய்யும் சேர்ந்து ஈரத்தன்மை கொடுப்பதால் தண்ணீரோ, பாலோ கலக்காமல் இந்த லட்டுகளைச் செய்ய முடியும்.
[நேற்றைய ரெசிப்பி: ஓட்ஸ் வித் ஹனி](https://minnambalam.com/k/2020/05/04/3)�,