_கடைசி நேரத்தில் ரத்தான சந்திரயான் 2

Published On:

| By Balaji

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (ஜூலை 15) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விணகலத்தை விண்ணில் ஏவ ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் தயார் செய்யப்பட்டது.

இதுவரையில் இஸ்ரோ கையில் எடுத்துக்கொண்ட பணிகளிலேயே சந்திரயான் 2 தான் மிகக் கடினமானது என்று கூறப்படுகிறது. நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்படுகிறது. இதுவரையில் நிலவின் தென்துருவ மண்டலத்தில் எந்த நாடுமே தடம் பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், “நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும், மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம். எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் பயணங்களில் நமது கண்டுபிடிப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயானை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறுகளை இஸ்ரோ கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து, குறித்த நேரத்தில் விண்கலனை ஏவ இயலாது என்று சுமார் 2 மணியளவில் இஸ்ரோ தெரிவித்தது.

இதுகுறித்து இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில், “விண்கலனை ஏவுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சந்திரயான் 2 விண்கலனை ஏவுதல் இன்று கைவிடப்படுகிறது. எப்போது விண்கலன் ஏவப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பச் சிக்கல் குறித்து இஸ்ரோ அதிகாரி ஒருவர் *ஐஏஎன்எஸ்* செய்தி முகமையிடம் பேசுகையில், “எரிபொருள் நிரப்பப்பட்டபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. முதலில் ராக்கெட்டிலிருந்து எரிபொருள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். பின்னர் ராக்கெட் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதற்குக் குறைந்தபட்சம் 10 நாட்கள் தேவைப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share