_இறுதிக் கட்டத்தை எட்டிய ஆர்யா படம்!

Published On:

| By Balaji

�ஆர்யா நடிக்கும் மகாமுனி படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

அருள்நிதி நடித்த மவுனகுரு படத்தை இயக்கியவர் சாந்தகுமார், இவருடன் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு படம் உருவாக்கவிருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்துக்கு மகாமுனி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த நவம்பர் மாதமே தொடங்கிவிட்டன. இதில் இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படப்பிடிப்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் சில கட்சிகளே மீதமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அரசியல் தொடர்பான கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். ஒரு முக்கிய அரசியல் கட்சித் தலைவரின் மகனாக ஆர்யா நடிக்கிறார். இந்தப் படம் கோடை விடுமுறையில் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மேலும், சக்தி சவுந்தரராஜன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்கு டெட்டி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். நேற்று முன்தினம் (மார்ச் 10) ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share