_இந்தியாவே காரணம்: பாகிஸ்தான் பதில்!

public

‘இந்தியாவின் ஊதுகுழலாக அமெரிக்கா செயல்படுகிறது’ என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று (ஜனவரி 5) குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி 1ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா 33 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் வெறும் பொய்களை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இஸ்லாமாபாத் இருக்கிறது” என்று பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவிருந்த நிதியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

கடந்த இருதினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தியாகப்போர் புரிந்துவருவதாக சீன அரசு பாகிஸ்தானை புகழ்ந்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்காதிருந்த பாகிஸ்தான் அரசு, அதிபர் ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை விவாதிக்க தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தை நேற்று இஸ்லாமாபாத்தில் கூட்டியது. அமெரிக்கா நிதியுதவியை நிறுத்தியதற்கு இந்தியாவே காரணம் என்று இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “இந்தியாவின் ஊதுகுழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துகளைத் தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது” என அபாண்டமாக குற்றம்சாட்டினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *