_ஆப்பிள்: இந்தியாவில் விலை குறையுமா?

Published On:

| By Balaji

உள்நாட்டிலேயே உற்பத்தியான ஐபோன் பிரீமியம் மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வருவதால் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் XR மற்றும் XS மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவிலேயே உற்பத்தியான இந்த மொபைல்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளன. இதனால் இவ்விரண்டு மாடல்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்ய ஆப்பிள் தலைமையகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த மாடல்களும் இந்தியாவில் விற்பனையாகவுள்ளன.

சென்னை அருகே ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கானின் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இறக்குமதி வரிகள் தவிர்க்கப்படுவது மட்டுமல்லாமல் பல செலவுகளும் குறைகின்றன. ஆதலால் ஐபோன்களின் விலை இந்திய சந்தையில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோனின் இதர மாடல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை பெரியளவில் விலைச் சலுகைகளை கொடுக்கவில்லை. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதால் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களையும் அமைக்கவுள்ளது.

ஆப்பிளின் மற்றொரு ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான விஸ்ட்ரானின் ஆலை பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஐபோனின் SE, 6S, 7 ஆகிய மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் இந்தியாவை ஒரு முக்கிய சந்தையாக ஆப்பிள் கருதுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் கூக் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆப்பிள் ஐபோன் XR மற்றும் XS ஆகிய மாடல்களுக்கு முறையே ரூ.76,900, ரூ.99,900 என இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரிகள் குறைவதால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி விலைச் சலுகைகள் வழங்கப்பட்டால் ஐபோன் ரசிகர்களுக்கு அதீத விலையிலிருந்து நிவாரணம் கிடைக்கக்கூடும்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share