_அஸ்வின்- ஜடேஜா : ஓய்வின் காரணம் என்ன?

Published On:

| By Balaji

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் சென்னையில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சீனியர் வீரர்களான யுவராஜ், ரெய்னா மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த இலங்கை போட்டியின்போது ஓய்வளிக்கப்பட்ட அஸ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இலங்கைத் தொடரின் போது பிசிசிஐயின் சுழற்சி முறையில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கவே இவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கையில், அவர்கள் நீக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில், விளையாடிவருகிறார். இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அவருக்குத் தற்போது இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரை அடுத்து இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அறிந்துகொள்வதற்காகக்கூட அவருக்கு இந்த ஓய்வு அளிக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அஸ்வின், ஜடேஜா நீக்கம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்த தேர்வுக்குழு ஆணையர் எம்எஸ்கே பிரசாத், ** கடந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக இளம் ஸ்பின்னர்களான சஹால், அக்சர் படேல் இருவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். சஹால் 4 போட்டிகளில் 5 விக்கெட்களும் (ஓவருக்கு 4.70 ரன்கள் விகிதம்), அக்சர் படேல் 6 விக்கெட்களும் (ஓவருக்கு 3.85 ரன்கள் விகிதம்) எடுத்துச் சிறப்பாக பந்து வீசினார். அஸ்வின், ஜடேஜாவிற்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.”** எனத் தெரிவித்துள்ளார்.

இப்படியெல்லாம் தேர்வுக் குழுவினர் கூறினாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் இவர்கள் இருவரின் மோசமான ஆட்டம் ஒரு முக்கியக் காரணம் என்றூ கருதப்படுகிறது. 3 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 167 ரன்களை வாரி வழங்கியதோடு 1 விக்கெட் மட்டுமே கைபற்றினார். ஜடேஜா 5 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். அவரது சராசரி 62.25.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மோசமான பார்ம் என்பது எல்லாருக்கும் வரும். ஆஸ்திரேலியா போன்ற பலமான அணிக்கு எதிராக இதுபோன்ற சீனியர் வீரர்களைத் தவிர்த்து இளம் வீரர்களைக் களமிறக்குவது எந்த அளவிற்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணி: விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், கே.எல். ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்ய ராஹானே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி

ஒரு நாள் போட்டித் தொடர் அட்டவணை:

செப்டம்பர் 17-சென்னை,

செப்டம்பர் 21-கொல்கத்தா,

செப்டம்பர் 24-இந்தூர்,

செப்டம்பர் 28-பெங்களூரு,

அக்டோபர் 1-நாக்பூர்

அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகள். மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகின்றன.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel