அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
இன்று (ஜூலை 11) சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கன்வாடிமையங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 38,000 அங்கன்வாடி மையங்களுக்கு பராமரிப்பு நிதி முறையாக வழங்கப்படும். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[அஜித் சம்பளம் 100 கோடியா?](https://minnambalam.com/k/2019/07/11/20)**
�,”