ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (மார்ச் 11 வியாழக்கிழமை) மகா சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (மார்ச் 11) மகா சிவராத்திரி அன்று இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வைக்கப்பட்ட மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளித்தேரோட்டம் நடைபெறும்.
அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு மறுநாள் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு மூடப்படும் என கோயில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
**-ராஜ்**�,