Nநீலகிரி ஆட்சியருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தமிழ்நாட்டில் நேற்று 1,127 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.15 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நீலகிரி ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் ஒன்றான தடுப்பூசி செலுத்தும் பணியிலும் நீலகிரி மாவட்டம் நல்ல முன்னேற்றத்தை கண்டது. அதன்படி, பெரும் சவாலான சூழ்நிலைகளை கடந்து, நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி பெற்றது. அதுபோன்று அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நடவடிக்கை மேற்கொண்டார்.

கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் மூலம் சுற்றுலா பகுதிகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு வரும் சுற்றுலா மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

கொரோனா குறைந்து வருகிற நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால், அரசு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, பிங்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தன்னுடன் பணியில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share