காதல் திருமணம் நிச்சயம்; பெற்றோர் சம்மதமும் முக்கியம்!

Published On:

| By Balaji

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து, அதில் கடைசியாக இருந்த நான்கு போட்டியாளர்களும் வெளியேறிவிட்டனர். 100 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த நினைவுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தனது திருமணம் பற்றிய தகவல்களைக் கூறியிருக்கிறார் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினும் லாஸ்லியாவும் பெயரிட விரும்பாமல் ஒருவிதமான உணர்வுக்குள் சிக்கியிருந்ததும், அதை காதல், காதல் என மற்ற போட்டியாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் பொழுதைக் கழிக்கும் அளவுக்கு மாற்றிவிட்டனர். எனவே, கேரள பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது போலவே, தமிழக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ளுமா என்ற ஆர்வத்தை லாஸ்லியா – கவின் ஜோடி உருவாக்கியது. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியதும் தங்களைப் பற்றி இவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய லாஸ்லியாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்டபோது, “என் திருமணம் நிச்சயமாகக் காதல் திருமணமாகவே இருக்கும். என் தாயும் தந்தையும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். சிறு வயதிலிருந்தே அதைச் சொல்லிச் சொல்லித்தான் என்னை வளர்த்தார்கள். எனவே, என் காதல் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்காது. பிக் பாஸ் வீட்டுக்குள் நான் இருந்ததை வெளியே எப்படி காட்டியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களிடம் பேசிப் புரியவைத்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால், என்ன ஆனாலும் என் பெற்றோர்களின் சம்மதத்துடன் மட்டுமே என் திருமணம் நடைபெறும்” என்று கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் கண்டிப்பாக உங்களைச் சந்திப்பேன் என வீட்டிலிருக்கும்போது பலரும் பலரிடமும் வாக்கு கொடுத்தார்கள். அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியான ஃபாத்திமா பாபுவுக்குக் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற முதல் வேலையாக அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கிறார் லாஸ்லியா.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share