உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கிற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பெரம்பலூரை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் தெருநாய் கடித்த நிலையில் குரங்கு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பிரபு என்பவர் குரங்கை தரையில் கிடத்தி, அதன் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி விட்டார். ஆனால் குரங்கு கண் விழிக்கவில்லை. பின்பு வாயோடு வாய் வைத்து ஊதி மூச்சு கொடுத்து முதலுதவி செய்தவுடன், குரங்கு கண் விழித்து பார்த்தது.இதை பார்த்த பிரபு கண்கலங்கி உயிர் வந்துருச்சு…உயிர் வந்துருச்சு…வண்டிய ஹாஸ்பிட்டலுக்கு விடு என தன் நண்பரிடம் கூறுகிறார். பின்பு பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, பலரும் பிரபுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
பிரபு குரங்கிற்கு முதலுதவி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், பிரபு சார் யு ஆர் கிரேட்” என்று பாராட்டியுள்ளார்.
**-வினிதா**
�,”