சவுதி அரேபியாவின் நிபத் பாலைவனத்தில் 90ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித விரல் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆப்ரிக்காவில் உருவான மனித இனம், உலகம் முழுவதிலும் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜெர்மனியின் மனித வரலாறு பற்றிய அறிவியல் நிறுவனமான மேக்ஸ் பிளான்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான மைக்கேல் பெற்றகாலியா கூறியதாவது, சவுதி அரேபியாவின் அல் வுஸ்டா என்னுமிடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது பழமையான ஹோமோ சேப்பியர்கள் வகையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் நடுவிரல் எலும்பு கிடைத்துள்ளது. இது அரேபிய தீபகற்பத்தில் கிடைத்த முதல் மனித தொல்பொருள் ஆகும்.
நிபத் பாலைவனத்தில் தற்போது உள்ளது கடல் மணல் ஆகும். ஆனால் முந்தைய காலத்தில் இது ஏரியுடன் வனவிலங்குகள் கொண்ட புல்வெளியாக இருந்துள்ளது. முதல் மனித இனம் ஆப்ரிக்கா கண்டத்தில் தோன்றி சுமார் 3 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கிருந்து கடலோர பகுதிகளுக்குச் சென்று கடல் வளங்களைக் கொண்டு வருவதற்காக 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேபியர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வேறு இடங்களுக்குக் குடியேறியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த எலும்புகள் 1.2இன்ச் நீளம் கொண்டவை. இவை ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறிய மனித இனத்தைச் சேர்ந்த எலும்புகளாகும். கடந்த 1 லட்சம் ஆண்டுகளில் ஹோமோ சேப்பியர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களுக்காக வேறு இடங்களுக்குக் குடியேறி இருக்கிறார்கள். இந்த எலும்புகளைக் கொண்டு அவர்கள் நிலப்பரப்பில் எவ்வாறு குடியேறினார்கள் என்பதனை கண்டறிய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
�,”