ரயில்வே அலுவலகத்தில் தீ: 9 பேர் பலி!

public

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு , குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் சாலையில் அமைந்துள்ள 13 மாடிகள் கொண்ட கட்டடத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில், லிப்ட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 4 தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.

**உயர்மட்ட விசாரணை**

இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், கொல்கத்தா ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சம்பவ இடத்தில் ரயில்வே ஊழியர்கள், பொது மேலாளர் இருக்கின்றனர். மாநில அரசுடன் இணைந்து நிவாரணப் பணியாற்ற தயாராக இருக்கிறோம். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள, ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.

**நிவாரணம்**

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். தீ விபத்து சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

**இரங்கல்**

தீ விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ரயில்வே அலுவலக கட்டட மோசமான தீ விபத்து வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் இரங்கலும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் நட்டா, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *