தினப் பெட்டகம் – 10 (02.09.2018)
இன்று உலக தேங்காய் தினம். தேங்காய் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
1. உலகம் முழுவதும் கீழே விழும் தேங்காய்கள், ஏறத்தாழ 150 பேரைக் கொல்கிறது!
2. ஓர் ஆண்டுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
3. ஒரு சராசரி தென்னைமரம், 15 – 60 ஆண்டுகள் காய்க்கும். ஆனால், சில வேளைகளில், சரியான பருவநிலை, தண்ணீர், மண் அமைந்தால், 80 ஆண்டுகள் வரை கூட காய்க்கும்!
4. ஒரு தென்னை மரத்தின் வயது 100 -120 ஆண்டுகள்.
5. உலகில் 1300க்கும் அதிகமான தேங்காய் வகை இருக்கின்றன.
6. Blood Plasmaவுக்குப் பதிலாக இளநீரை, தேங்காயிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்தலாம்!
7. ஒரு தென்னை மரம் 30 மீட்டருக்கும் உயரமாக வளரக்கூடியது.
8. தேங்காய் கடலில் வெகுதூரம் மிதந்து சென்று, மண் இருக்கும் இடத்தில் வேரூன்றி வளரக்கூடியது.
9. இரண்டாம் உலகப் போர் நேரத்தில், blood plasma கிடைக்காத காரணத்தினால், தேங்காய்த் தண்ணீரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
10. தென்னை மரத்தின் தாவரவியல் பெயர்: Cocos Nucifera
**- ஆஸிஃபா**�,”