நடிகரும், இயக்குனருமான கிரிஷ் கர்நாட் இன்று (ஜூன் 10) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 81.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்நாட் இன்று காலை பெங்களூரில் உள்ள அவரது வசிப்பிடத்தில் காலமானார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் இவர் சிறந்து விளங்கினார். 1938ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ‘மாத்தேரன்’ எனும் இடத்தில் இவர் பிறந்தார். 1958ஆம் ஆண்டு கர்நாடகா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற இவர், பின்னர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் படித்து பட்டம் பெற்றார். நடிகராகவும், இயக்குநராகவும் மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர், இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் விருதைப் பெற்றிருந்தார். மேலும் இவரது இலக்கிய மற்றும் திரைத்துறை சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி ஆகிய பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான இவர், அதன் பின்னர் பிறமொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் கதாநாயகி நக்மாவின் தந்தையாக நடித்திருந்தார். தொடர்ந்து மின்சாரக்கனவு, ரட்சகன், ஹேராம், செல்லமே, நர்த்தகி, முகமூடி, 24 போன்ற பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சிறந்த இயக்கம், திரைக்கதை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளையும், மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவரது மறைவு, திரைத்துறையினர் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
**
மேலும் படிக்க
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)
**
�,”