9ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

Published On:

| By Balaji

ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 3.74 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் குறித்த விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் மொத்தம் 26.36 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. எனினும் பெட்ரோலியம், பொறியியல் சாதனங்கள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி மந்தமாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜனவரியில் 15.67 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் 271.80 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது 9.52 சதவிகிதம் வளர்ச்சியாகும். இறக்குமதியைப் பொறுத்தவரையில், மேற்கூறிய காலகட்டத்தில் மொத்தம் 427.73 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த பத்து மாதங்களுக்கான வர்த்தகப் பற்றாக்குறை 155.93 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 136.25 பில்லியன் டாலராக இருந்தது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share