rமகளிர் தினம்: சிறப்பு சலுகை அறிவித்த ஜெகன்

Published On:

| By Balaji

மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று பெண்களுக்கு சிறப்பு சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திரா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு செயலியான, ’திஷா’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் செல்போன்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும். மார்ச் 8ஆம்தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும். மகளிர் தினம் அன்றைக்கு அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

திஷா ஆப்-பில் பெண்கள் மற்றும் மக்களுக்கு அவசரகால சூழ்நிலைகளில் உதவும் SOS சேவையும் உள்ளது. மேலும்,அருகிலுள்ள பாதுகாப்பான இடங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பயனுள்ள தகவல்களும் அதில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் நடத்தவும்,அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகள் நடத்தவும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share