பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, நியூசிலாந்து உட்பட பல இடங்களுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தென் பசிபிக் கடலில் அமைந்து இருக்கும் தீவு தேசம்தான் டோங்கா. இந்த தீவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு எரிமலைகளும் உள்ளன. இதில் சில எரிமலைகள் கடலுக்கு அடியிலும் உள்ளன.
டோங்கா நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற எரிமலை வெடித்துச் சிதறியது. கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறியதில், வான் பரப்பு முழுவதும் புகை மண்டலங்களாக மாறின. எரிமலை வெடித்தால் பகல்நேரமும் இரவு போல் காட்சி அளித்ததால் டோங்கோ மக்கள் அச்சமடைந்தனர்.
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி தாக்கியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அதுபோன்று, சுனாமி எச்சரிக்கை காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது டோங்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்துக்கும், அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING: Satellite image captures Tonga's Hunga volcano erupting
(Source: @US_Stormwatch) pic.twitter.com/VolrJs7Gfi
— The Spectator Index (@spectatorindex) January 15, 2022
கடலுக்குள் எரிமலை வெடித்தது சாட்டிலைட்டில் பதிவாகி உள்ளது. அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோன்று டோங்கோ மக்கள் வேறு ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
**-பிரியா**
�,”