நீட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு!

Published On:

| By Balaji

கொரோனாவால் நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மே மாதத்தில் நடைபெற வேண்டிய மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, இரு முறை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியாகக் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் போபண்ணா மற்றும் ராமசுப்பிரமணியன் அமர்வு, தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் அக்டோபர் 14ஆம் தேதி தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அக்டோபர் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இதை விசாரித்த நீதிபதிகள் அனைத்து மாணவர்களுக்கும் முடிவுகளை அக்டோபர் 16ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share