Zரயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு!

Published On:

| By Balaji

ரயில்வே வாரியத்தில் 25 சதவிகிதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரயில்வே வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 200இல் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டது.

இந்திய ரயில்வே வாரியத்தில் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், இயக்குநர் நிலையிலான அதிகாரிகளையும், அதற்கும் மேலான அதிகாரிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் 50 உயரதிகாரிகள் மண்டலங்களுக்கிடையே பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி இயக்குநா் நிலையிலான 200 அதிகாரிகளின் எண்ணிக்கையை 150ஆக குறைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 50 அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு திங்களன்று பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது, அதிகாரிகளின் ஒரு பகுதியினரின் பணிகளைத் திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதன்படி ஐஆர்எஸ்இ மற்றும் ஐஆர்டிஎஸ்ஸில் இருந்து தலா 10 அதிகாரிகளும், ஐஆர்ஏஎஸ்ஸில் இருந்து 7, ஐஆர்எஸ்எம்இயில் இருந்து 6, ஐஆர்எஸ்இ மற்றும் ஐஆர்எஸ்எஸ்இயில் இருந்து தலா 5, ஐஆர்எஸ்எஸ் மற்றும் ஐஆர்பிஎஸ் தலா 3, ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒருவர் என மொத்தம் 50 உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு மூத்த அதிகாரி தெரிவிக்கையில், இது குறைந்த அதிகாரத்துவம் பற்றிய பிரதமரின் பார்வையின் ஒரு பகுதியாகும். நபர்கள் அடிப்படையில் குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை (Less government maximum governance). இந்த அதிகாரிகள் தங்கள் பணிகள் மிகவும் திறம்பட பயன்படுத்தப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இந்தத் திட்டத்தை முதன்முதலில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் வடிவமைத்தது. அச்சமயம் வாஜ்பாய் அரசால் பரிந்துரைக்கப்பட்ட இத்திட்டம், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share