^மகிழ்ச்சி…மகிழ்ச்சி: ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 80 கோடி மக்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்களும், கொண்டை கடலையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதனை வரவேற்று இன்று (ஜூலை 1) பேசிய ஜெயரஞ்சன், பிரதமர் அறிவித்த புதிய பாதை பயணத்தின் ஒரு பகுதி இது என்றால் அதனை வரவேற்கலாம் என்றார். 50, 60ஆம் ஆண்டுகளில் பிற நாடுகளில் இருந்து தானியங்களை இந்தியா வாங்கி வந்த நிலை மாறியதைக் குறிப்பிட்டார்.

பொது விநியோக அமைப்பு பல முனைகளில் இருந்தும் ஆபத்துக்களை சந்தித்ததாக கூறிய அவர், புதிய பொருளாதார கொள்கையில் தானியங்களுக்கு பதிலாக மக்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, உணவுக் கழகத்தை மூடவும் பரிந்துரைத்தனர் என்றார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தனது இரண்டாவது மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share