பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் அவதிகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சலுகையல்ல, கடமை என்ற கட்டுரை குறித்து இன்று (ஜூலை 6) விரிவாகப் பேசினார். விவசாயத்திற்கு வாய்க்கால், ஏரி மற்றும் கிணற்றுப் பாசனம் மிக முக்கியமானது எனவும், 1950 களில் இருந்து மூன்று பாசன முறைகளும் எவ்வாறு இருந்தது என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது 60 சதவிகித பாசனம் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கான காரணங்களை விவரித்த ஜெயரஞ்சன், அதன் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்தும், இலவச மின்சாரத்தின் வரலாறு, பசுமை புரட்சியின் வேகம் குறைந்தது தொடர்பாகவும் விவரித்தார். ஆழ்துளை கிணறுகள் மூலமாக அதிகளவு நீர் எடுத்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். நிலத்தடி நீர் மட்டம் குறைய விவசாயிகள் மட்டும் காரணமல்ல என்று கூறி அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”