தமிழகம் முழுவதும் 36 டிஎஸ்பிக்கள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் (அக்டோபர் 5) உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல் மாவட்டத்தில் பணியாற்றிய, 10 உதவி ஆணையர்கள் உட்பட, 36 டிஎஸ்பிகளை, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அதிரடியாக மாற்றியுள்ளார். இதில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிக்களின் விவரங்கள் பின்வருமாறு:
மயிலாப்பூர் உதவி ஆணையர் விஸ்வேஷ்ரய்யா, மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த ஸ்டீபன், விருதுநகர் மதுவிலக்குப் பிரிவுக்கும், கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் அர்னால்டு ஈஸ்டர், போலீஸ் நலன் பிரிவுக்கும், அந்தப் பதவியில் இருந்த செல்வக்குமார், மத்தியக் குற்றப்பிரிவுக்கும், பெரம்பலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பி குமாரவேலு, சென்னை தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த ராஜசேகரன், மதுரை மத்தியக் குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி தேவநேசன், சென்னை மதுவிலக்குப் பிரிவுக்கும், அந்தப் பதவியில் இருந்த சுதாகர் தேவ் சகாயம், ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும், இந்தப் பதவியில் இருந்த தானாஜி, காஞ்சிபுரம் மாவட்டக் குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், பட்டாபிராம் உதவி ஆணையர் கண்ணன், சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், சென்னை வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் ராமமூர்த்தி, பொருளாதார குற்றப்பிரிவுக்கும், அந்தப் பதவியில் இருந்த வெங்கடேசன், சென்னை புழல் உதவி ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த பிரபாகரன், மத்தியக் குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வேலூர் மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பி குத்தாலிங்கம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கும், அந்தப் பதவியில் இருந்த சுந்தரமூர்த்தி, வேலூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், சென்னை மதுவிலக்குப் பிரிவு உதவி ஆணையர் பிரத்திவி ராஜன், பொருளாதார குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதம் 36 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பணியிடை மாற்றம் செய்யப்பட்ட அனைவரும் ஓரிரு நாளில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளனர் எனக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
�,