நட்சத்திர சங்கமம்: ரசிகர்களைக் கவர்ந்த 80’s ரீயூனியன்!

Published On:

| By Balaji

இந்தியாவின் முக்கிய திரை நட்சத்திரங்கள் ஒன்றிணையும் 80’s ரீயூனியன் நிகழ்ச்சி இந்த ஆண்டு சிரஞ்சீவியின் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1980-களில் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த நடிகர், நடிகைகளுக்கு இடையே இத்தனை வருடங்கள் கழிந்தும் ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து வருகிறது. வருடந்தோறும் 80’s ரீயூனியன் என்ற பெயரில் ஒரே இடத்தில் சங்கமித்து அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகளில் இதில் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு தீமில் உடையணிந்து அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அதே போன்று ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஏதேனும் ஒரு நபரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டிற்காக 80’s ரீயூனியன் நிகழ்ச்சியை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். நடிகர்கள் அனைவரும் இந்த விழாவில் கறுப்பு மற்றும் தங்க நிற உடைகள் அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாங்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் க்ரூப் ஃபோட்டோக்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மோகன்லால், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ரமேஷ் அரவிந்த், பிரபு, சுரேஷ், பாக்யராஜ், பூர்ணிமா, குஷ்பு, ஜெயராம், சுமன், சரத்குமார், ராதிகா, ஜாக்கி ஷ்ராஃப், ரகுமான், அம்பிகா, ராதா, நதியா, சரிதா, மேனகா, ஜெயபிரதா, ஜெயசுதா, ரேவதி, லிஸ்ஸி, பிரியதர்ஷன், சுமலதா, சுஹாசினி, அமலா, ஷோபனா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மேலும் விழாவின் சிறப்பு விருந்தினராக ராம் சரண் கலந்துக் கொண்டார்.

தங்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகள் ஒன்றாகச் சங்கமித்து, உற்சாகமாகத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share