இந்த நிதியாண்டில் வளாக நேர்காணல் வாயிலாக சுமார் 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கிளைகளில் 2.29 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைபார்க்கின்றனர். இந்நிறுவனம் கல்வி நிறுவனங்களில் வளாக நேர்காணல்கள் வாயிலாக பணியாளர்களைத் தேர்வுசெய்கிறது. நடப்பு நிதியாண்டில் மட்டும் வளாக நேர்காணல்கள் வாயிலாக 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்ஃபோசிஸ் தலைமைச் செயலதிகாரியான பிரவீன் ராவ் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தக் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 8,000 பேருக்கு நாங்கள் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். இதில் புதிதாகப் பட்டம் பெற்ற இளைஞர்கள் மட்டும் 2,500 பேர். இந்த முழு ஆண்டில் 18,000 பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், பணியாளர் ஈடுபாடு, தொழில் வாய்ப்புகளில் முதலீடு மற்றும் பணியாளர் அனுபவத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக இன்ஃபோசிஸ் நிறுவனம் சில திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது” என்றார்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கிய தொழில்நுட்ப மையத்தில் 7,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”