கிச்சா சுதீப் நடித்த பயில்வான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
கன்னட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் பயில்வான். குத்துச் சண்டைவீரராக சுதீப் நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாகவும், ஆகாங்க்ஷாசிங் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சுமார் 45 கோடிக்கும் மேல் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது பயில்வான்.
ஜனவரி மாதம் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பயில்வான் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘தீம் லிரிக்கல்’ வீடியோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் இந்தியாவையும் கடந்து நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளிலும் ரிலீசாகவுள்ளது.
ஆர்ஆர்ஆர் மோஷன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”