நடிகர் ரஜினிகாந்தை ட்விட்டரில் தீவிரமாகத் தேடிவருகின்றனர். பெரியார் சிலையின் மீது கைவத்ததற்காக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், ரஜினி மட்டும் அமைதியாக இருக்கிறார் என்று தமிழக மீடியா அவர் பக்கம் லைட்டைத் திருப்பியிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இன்று காலையிலிருந்து ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் இந்த இரண்டு அக்கவுண்டுகளையும் மற்ற ரசிகர்களிடம் பரவச்செய்யும் வேலையை ரஜினி ரசிகர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். தனது வருகையை அறிவிக்கும் விதத்தில், ரஜினியின் ஃபேஸ்புக் அக்கவுண்டில் **வணக்கம்** என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல அல்லாமல் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் **வணக்கம். வந்துட்டேன்னு சொல்லு** என்று கபாலி படத்தில் இடம்பெற்ற ரஜினியின் படத்துடன் பதிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் ட்விட்டர் மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கிலும் சேர்த்து அக்கவுண்ட் தொடங்குவதற்கான காரணம், சொல்ல வரும் கருத்தை முழுவதுமாக சொல்வதற்காகத்தான். ட்விட்டரில் தொடர்ந்து இயங்கினாலும், கட்சி தொடர்பான அறிக்கைகளையும், நீண்ட கருத்துகளையும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, அந்த லிங்க் மட்டும் ட்விட்டரில் பதிவு செய்யப்படுவது பிரபலங்களின் வழக்கம். கௌதமி WordPress இணையதளத்தில் தனது நீண்ட கருத்துகளை எழுதிவருகிறார். படியிலிருந்து தவறிவிழுந்தபோது நடிகர் கமல்ஹாசன் பிளாக்ஸ்பாட் மூலம் தனக்கு நேர்ந்த விபத்தை விளக்கி எழுதினார். இந்த காரணத்துக்காகவே ரஜினி தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார். ரஜினியின் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இன்று(07.03,2018) மதியம் 12 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் நாற்பதாயிரம் பேர் தொடர்ந்திருக்கிறார்கள்.
[ரஜினிகாந்த ஃபேஸ்புக்](https://www.facebook.com/Rajinikanth/) [ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம்](https://www.instagram.com/Rajinikanth/)�,