8பேயாக நடிக்கும் லைலா
�
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை லைலா சினிமாவில் ரீஎண்ட்ரியாகவுள்ள ஆலிஸ் படத்தில் அவர் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை லைலா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு நீண்டகாலம் விலகியே இருந்துவிட்டார். அண்மையில் கண்ட நாள் முதல் படத்தில் நடித்த பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார், இயக்குநர் பிரியா ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பில் கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி ஆலோசித்ததாகவும் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக சில யூகங்கள் எழுந்தன. இதையடுத்து கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்பாகவே சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க லைலா வேறு ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார்.
ஆலிஸ் என்ற படத்தில் லைலா நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை புதுமுக இயக்குநரான மணி சந்துரு இயக்குகிறார். திரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பேய் கதாபாத்திரத்தில் லைலா நடிக்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் லைலாவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக எழில் அரசும், படத்தொகுப்பாளராக அர்ஜுனன் நாகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.�,