சாஹோ படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இசையமைப்பாளர் தமண் படக்குழுவில் இணைந்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். சுஜித் இயக்கத்தில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் பிரபலப்படுத்தும் விதமாக அந்தந்த திரையுலகில் இருந்து நடிகர், நடிகைகளை படக்குழுவில் இணைத்துள்ளனர். அந்தவகையில் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷங்கர்-இஷான்-லாய் இசையமைக்கும் இந்தப் படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்ட் 15ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இசையமைப்பாளர் தமண் படக்குழுவில் இணைந்துள்ளார்.
ஷங்கர்-இஷான்-லாய் ஆகியோருக்கும் இயக்குநர் சுஜித்துக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவுவதால் அவர்கள் படக்குழுவில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் தமண் மீதமுள்ள பணிகளை மேற்கொள்வார் என்றும் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
ஏற்கெனவே படத்தின் புரொமோஷன்களுக்கான பாடலை தமண் உருவாக்கி பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
மதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சாபு சிரில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)
**
.
**
[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)
**
.
**
[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
.�,”