8கங்கணாவுக்கு சம்மன்!

public

i

நடிகர் ரித்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்துக்கு, தானே குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களைத் தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து தானே குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இந்த விசாரணையில் கங்கணா, ரித்திக் ரோஷனின் செல்போன் எண்ணை ரிஸ்வானிடம் கொடுத்து அழைப்பு விவரங்களைக் கேட்டதாக காவல் துறை தரப்பு தெரிவித்தது. ஆனால், இதை மறுத்த கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாண்டல், அனுமானத்தின் அடிப்படையில் எதையும் கூற வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கங்கணாவுக்கு, தானே குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதே புகாரில் சிக்கியுள்ள மாடல் ஆயிசா ஷெராஃப்புக்கும் குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவர் நடிகர் சாஹில் கான் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களிடமிருந்து குற்றப்பிரிவு போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரித்திக் ரோஷனும், கங்கணாவும் காதலித்துவந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். பிரிந்த பின்னர், ஒருவர்மீது ஒருவர் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *