iநான் சூரியகாந்தி அல்ல மூலிகை: சோ.தர்மன்

Published On:

| By Balaji

2019-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதுப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் தமிழுக்கான விருதை எழுத்தாளர் சோ.தர்மன் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய உலகின் மிக உயரிய அங்கீகாரங்களுள் ஒன்றாக சாகித்திய அகாடமி விருதுகள் திகழ்ந்து வருகிறது. தேசிய அளவில் சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கான இந்த விருதுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேபாள மொழி தவிர்த்த மற்ற மொழிகளுக்கான விருதுப்பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழில் இந்த வருடத்திற்கான விருதை தனது சூல் நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மன் பெறவிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட சோ.தர்மன் 1980-களில் இருந்து எழுதி வருகிறார். இவர் எழுதி வெளியான கூகை, சோகவனம், ஈரம், சோ.தர்மன் கதைகள், சூல் போன்ற புத்தகங்கள் கவனம் ஈர்த்தன. இந்த நிலையில் இவர் எழுதிய சூல் நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து, நாவலின் ஆசிரியர் சோ.தர்மன் அவர்கள் பேசும்போது, ‘சாகித்ய அகாடமி விருது அறிவித்து மத்திய அரசு அங்கீகாரம் தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் நடிகன் அல்ல, நான் ஒரு எழுத்தாளன். நான் சூரியகாந்தி போல் அல்லாமல் மூலிகை போல் இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share