எவனாச்சும் நல்லது நடக்க உடுறானான்னு பாரேன்னு பேசிக்கிட்டே போனார் ஒருத்தர். என்னண்ணே இவ்ளோ டென்சனா இருக்க, இங்க வந்து உக்காருண்ணே, டீ சாப்டுண்ணேன்னு பேச்சு கொடுத்தேன். “அட ஆமாம் தம்பி. எந்த பிர்ச்சினையும் இல்லாம ஒரு வழி கிடைச்சுதேன்னு போறானுகளா பாரேன். அங்க ஏன் இத பண்ணல? இங்க ஏன் இத பண்ணல? அப்படின்னு அசட்டிக்கிட்டே இருக்காணுக. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காம எப்படிங்க இருக்கமுடியும்?” அப்டின்னு அவர் பேசிக்கிட்டே இருந்தப்ப அங்க வந்த ஒருத்தர் ‘என்னப்பு, சோலி இருக்குன்னு கிளம்பிட்டு இங்க வந்து உக்காந்திருக்க’ன்னு கேட்டார். ‘அட நமக்கு தெரிஞ்ச தம்பி டீ சாப்டுன்னு கூப்புட்டாப்ல. சரின்னு வந்தேன்’னு அவர்ட்ட சொன்னவர், ‘நம்ம பேசிகிட்டிருந்த மேட்டர் அவருக்கு தெரிய வேண்டாம்’ அப்டின்னார். நானும் சரின்னு விட்டுட்டேன். ‘சரிப்பா நான் கிளம்புறேன்னு பாக்கெட்ல கை விட்டவர்ட்ட நான் காசு குடுத்துக்குறேன் கிளம்புங்கண்ணேன்னு சொல்லி அவர் ரெண்டு அடி எடுத்து வைக்கல. அந்த லேட்டா வந்த இன்னொருத்தர் ‘அண்ணே மறக்காம சபரிமலை மேட்டர்ல உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கணும்னு உங்க தலைவருக்கு லெட்டர் எழுதி போட்டு பதில் சொல்லுங்க’ன்னு சொன்னது தான் தாமதம். இந்தாத்தண்டி கல்லை கொண்டு அடிச்சிட்டாரா. இப்ப தான் ஆஸ்பிடல் போய்ட்டு வந்துக்கிட்டு இருக்கேன். நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் இன்னொரு நியூஸ் டைப் பண்ணிட்டு வர்றேன்.
**சீமான்**
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல!
பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது!
**கார்த்திகா ராம்குமார்**
செந்நாய் என்று ஒரு காட்டு நாய் வகை இருக்கிறது.. ஒரு போதும் தனித்து இயங்காது. கூட்டமாக வரும்.. இரையை குறி வைக்கும்.. எவ்வளவு காலம் ஆனாலும் காத்திருந்து தன் கும்பல் கை ஓங்கும்போது தாக்கும் அழிக்கும்.
**கொண்டல் சாமி**
தீர்ப்பு முரண்:
1949 டிசம்பர் 22-23 இல் இந்து அமைப்பினர் குழந்தை வடிவில் இருக்கும் ராமர் சிலையை மசூதிக்குள் வைத்தது தான் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி என்றும், அது மிக தவறானது என்று தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறிவிட்டு,
தீர்ப்பின் இறுதியில் 1949லிருந்து இந்துக்கள் அங்கு வழிபாடு செய்கிறார்களென்றும், அந்த நம்பிக்கையை எப்படி குறைத்து மதிப்பிடுவதென்றும் கூறுவது முரணாக தெரியவில்லையா? இது சரியா?
**ஜால்ரா காக்கா**
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான்
வாய வச்சுட்டு சும்மா இருண்ணே..நீ எதையாவது பேசி ஜெயிலுக்கு போயிட்டா நான் யாரை வச்சு ட்வீட் போட முடியும்.
**அருள்குமார்**
என் வீடு இடிக்கப்பட்டது. நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு போனேன்.
கோர்ட் சொன்னது வீட்டை இடித்தவனுக்கே வீடு சொந்தமென்று.
**முகமூடி™**
கடவுளிடம் வேண்டிக்கிட்டு காணிக்கை செலுத்தியதுதான் உலகின் முதல் லஞ்சம்..!!
அதையும் அவர் ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றி தராமல் போனதுதான் உலகின் முதல் ஊழல்..!!
**திவாகரன்**
மின்னல் சிதறலில்
முனகி முனகி வெடித்த வானம்
அடித்துப் பெய்தது
பெரும் மழையொன்றை.
நிலத்தின் காமத்தழல் அடங்க
அதன் குன்றுகுழிச்
சுரங்கங்கள் வாயிலில் ததும்பிக்
கொண்டிருந்தது வெள்ளம்!
**அஜ்மல் அரசை**
அயோத்தி தீர்ப்பு ‘வெட்கக் கேடானது, அருவருப்பானது…’ பொங்கியெழும் பாகிஸ்தான்..!
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம் பேசாம மூடிக்கிட்டு கிளம்புங்க…
**V Î Š H Ń Ù ????????**
எப்படியோ ராமர் கோவிலை மீட்டாச்சு..
இனி அனுமார் இலங்கைக்கு தூக்கிட்டு போன சஞ்சீவி மலையவும் திரும்ப பேத்து எடுத்துட்டு வந்துட்டா கடமை முடுஞ்சுரும்..
-லாக் ஆஃப்.
�,”