என்சிசி மாஸ்டர் பதவி: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குள் மோதல்!

public

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த காலங்களில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 5) உடற்கல்வித் துறை ஆசிரியர்களான ராஜராஜ சோழனுக்கும், தியாகுவுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதில் காயமடைந்த ராஜராஜ சோழன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து டிஇஓ நடத்திய விசாரணையில், “ஆயுத பூஜையை முன்னிட்டு சுத்தம் செய்வதற்காக வெளியாட்களை வைக்கலாமா அல்லது உள் ஆட்களை வைத்து வேலை செய்யலாமா என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பிரஷர் ஏற்பட்டதால் ராஜராஜ சோழன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்று தியாகு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், பள்ளி வட்டாரத்தில் விசாரித்ததில், இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்களாக ராஜராஜ சோழன், தியாகு பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். உடற்பயிற்சி கல்வி இயக்குநர் ஒருவரும் கூடுதலாக இருக்கிறார். இவர்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு ஆசிரியர்களும் என்சிசி மாஸ்டர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். இருவரில் தியாகுவுக்கு இந்தப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் ராஜராஜ சோழன் தியாகுவிடம் கோபமாகப் பேசியுள்ளார். வாய் வார்த்தைகள் முற்றவே இருவரும் மோதிக்கொண்டது தெரியவந்தது.

என்சிசி மாஸ்டர் பதவிக்கு அப்படி என்ன ஓர் அதிகாரம் என்று முன்னாள் என்சிசி மாஸ்டர் ஒருவரிடம் விசாரித்ததில், “மத்திய அரசு கட்டுப்பாட்டில் இந்தப் பதவி வந்துவிடும். என்சிசி மாஸ்டர்களை மாநில அரசால் இடம் மாற்றம் செய்ய முடியாது. ராணுவ கேன்டீன்களில் இவர்கள் அனைத்து விதமான பொருள்களையும் மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். அரசு செலவில் வெளிமாநில மற்றும் நாடுகளுக்கு என்சிசி கேம்புக்கும் செல்லலாம். இதுமட்டுமின்றி மூன்று ஸ்டார் அந்தஸ்தும் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த அதிகாரத்துக்குத்தான் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். என்சிசி மாஸ்டராக வேண்டும் என்றால் முதலில் கேர் டேக்கராக இன்சார்ஜில் இருக்க வேண்டும். நிரந்தரமாக மாஸ்டராக வேண்டும் என்றால் நாக்பூரில் உள்ள ராணுவத்தில் மூன்று மாதம் பயிற்சி பெற வேண்டும். இந்தக் காலகட்டத்தில் கடுமையான பல பயிற்சிகள் கற்றுத் தரப்படும். இந்தப் பயிற்சியை முடித்தால்தான் என்சிசி மாஸ்டர் அந்தஸ்து கிடைக்கும்.

இந்தப் பள்ளியில் பணி புரிந்தவர்கள் கேர் டேக்கராக இருந்தார்களே தவிர, நிரந்தரமாக என்சிசி மாஸ்டராக இருந்ததில்லை. இதனால்தான் இவர்களுக்குள் இவ்வளவு போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டுமின்றி விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியிலும் என்சிசி மாஸ்டர் பதவிக்கு மோதல்கள் நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கல்லூரியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக என்சிசி மாஸ்டராக யாரும் பதவியில் இல்லை. என்சிசி மாஸ்டர் இல்லாததால் சிதம்பரம் ராணுவ அலுவலகம் இக்கல்லூரிக்கு, உங்களது என்சிசியை ஏன் கேன்சல் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பி மெமோ கொடுத்திருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *