அயோத்தி தீர்ப்பு : மத நல்லிணக்கம் குறித்து நெட்டிசன்கள்!

Published On:

| By Balaji

பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை அரசியல் கட்சியினரும், மதத் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தை பேணுவதற்காக பல இடங்களிலும் 144 தடை போடப்பட்டிருக்கிறது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாட்ஸ அப் குழுக்களில் கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை பதிவிடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டரிலும் இதுபோன்ற கருத்துகளும் பகிரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் ட்விட்டரில் அயோத்தி தீர்ப்பு தொடர்பான ஹேஷ்டேக்குகள் தான் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன. இதிலும் #hindumuslimbhaibhai என்ற ஹேஷ்டாக்கில், இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள் என ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

”வேற்றுமையில் ஒற்றுமை”, ”இந்தியா மதச்சார்பற்றதாக நாடு, ”இந்து முஸ்லீம் சகோதரர்கள்’ என நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில

**Vijay hassan**

தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அதற்கு கட்டுப்படுவோம். தீர்ப்பை மதிக்க வேண்டும்.

** Isha Pant, IPS**

தீர்ப்பு எதுவாக இருந்தாலும், இன்றும் என்றென்றும் நாடு வெல்லட்டும் என்று பெங்களுரூ நகர, தென்கிழக்கு பிரிவு, துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

** abuzar**

** ரகுராம் விக்னேஷ்**

ராமர் கோயிலை இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை இந்துக்களும் கட்டி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் அதுவே மத நல்லிணக்கம்.

** Raushan Singh**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share