சென்னை முழுவதும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக மேற்கொண்ட டெண்டர்களை மெட்ரோ வாட்டர் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் நடைபெறுவதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி செய்யப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக 50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொண்ட டெண்டர்களில் ஊழல் நடந்திருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
அதாவது, மெட்ரோ வாட்டர் நிறுவனம் சார்பில், சென்னை முழுவதும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக டெண்டர் கோரப்பட்டது. இதற்கு 74 நிறுவனங்கள் டெண்டர் கோரியிருந்தன, இதுகுறித்து தெரிவித்த அறப்போர் இயக்கம், டெண்டர் கொடுக்க சென்னை மெட்ரோ வாட்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை குண்டர்களை வைத்து அருகிலுள்ள அசோகா ஹோட்டலுக்கு போய் டெண்டரை கொடுக்க சொல்வதாகவும் அமைச்சரின் செட்டிங் மூலம் மட்டுமே டெண்டர் கொடுக்கப்படும் என்று சொல்வதாகவும் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அறப்போர் இயக்கம் சார்பில், டெண்டர் கோருவது போல், அங்கு சென்ற போது, டெண்டரில் ஊழல் நடப்பது தெரியவந்தது என்று கூறியிருந்தது. அங்கு நடந்தது குறித்த [வீடியோ]( https://youtu.be/Od9594OBJ8A) ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தன் பெயர் புருஷோத்தமன் என்று கூறும் நபர், இங்கே டெண்டர் போட முடியாது, அசோகா ஹோட்டலுக்கு போய் பாருங்கள் என்று கூறுகிறார். தொடர்ந்து அந்த வீடியோவில் எல்லாம் அமைச்சரால் செட்டப் செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த டெண்டருக்கும், அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. தொடர்ந்து மெட்ரோ வாட்டர் நிறுவனத்துக்கு டெண்டர் போட வருபவர்கள் ஏன் அசோகா ஹோட்டலுக்கு அனுப்பப்படவேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியது. எனவே இறுதி செய்யப்பட்ட இந்த 74 டெண்டர்களை ரத்து செய்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரியிருந்தது.
இந்தச் சூழலில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக மேற்கொண்ட டெண்டர்களை ரத்து செய்துள்ளதாகச் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், புதிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும்; ஆனால், அதற்குக் கால தாமதமாகும் என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**
�,”