விக்கிரவாண்டி அதிமுக முன்னிலை… நாங்குநேரி நெருக்கமான போட்டி!

Published On:

| By Balaji

I

அக்டோபர் 21 ஆம் தேதி நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 24) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 6 ஆவது சுற்று முடிவில் 33 ஆயிரத்து 701 ஓட்டுகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 20 ஆயிரத்து 529 வாக்குகள் பெற்றுள்ளார். முதல் சுற்றில் இரண்டாயிரம் ஓட்டுகள் என ஆரம்பித்த வித்தியாசம் ஒவ்வொரு சுற்றாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே சென்று ஆறாவது சுற்று முடிவில் 13 ஆயிரம் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

இதேபோல நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவே தொடங்கியதால் 3 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 9 ஆயிரத்து 327 வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 6 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

விக்கிரவாண்டியில் வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், நாங்குநேரியில் அதிமுகவுக்கு, காங்கிரசுக்கும் போட்டி நெருக்கமாக இருக்கிறது.

விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து வெடிவெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

”விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அஇஅதிமுக வெற்றி பெறும்” என்று ஆரம்ப கட்டத்திலேயே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share