}
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் இன்று(ஜூலை 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஜூலை 17) முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். இந்த நாட்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
வார நாட்களில் ரயில்கள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகு நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முகக்கவசத்தை அணியாத அல்லது சரியாக அணியாதவர்களுக்கு உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இதுவரை ரூ.9200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,