வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் பணி!

Published On:

| By Balaji

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், பிரதமக் கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம், மாவட்டக் கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 113

பணியின் தன்மை: உதவியாளர்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10+2+3 என்ற முறையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விகிதம்: ரூ.2,400/- முதல் ரூ.62,000/- வரை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 31/3/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.kpmdrb.in) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share