சர்வதேச விமானப் போக்குவரத்து தடை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு!

Published On:

| By Balaji

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமானப் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வந்தாலும் சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டுவரவும், உள்நாட்டில் சிக்கிய வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே மாதத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டுவருகிறது.

எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பு ஆண்டில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண் சட்டம் 2005இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share