tதீபாவளி: அதிகாலை 2 மணிவரை கடைகள் திறக்கலாம்!

Published On:

| By Balaji

தீபாவளியை முன்னிட்டு அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடை வீதிகள் களைகட்டியுள்ளன. இந்தநிலையில் டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ”பெரும்பாலான விற்பனையாளர்கள் வட்டிக்குக் கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களான வெள்ளி, மற்றும் சனிக் கிழமைகளில் கூலித் தொழிலாளர்கள், பிற மாவட்டங்களில் பணியாற்றி சொந்த ஊருக்குத் திரும்புவோர், மதுரை சுற்றுவட்டார மக்கள் ஆகியோர் ஆடைகளை வாங்கிச் செல்வார்கள் .ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களில், இரவு முழுவதும் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்ட்டது.

இதனால் விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் கடனை வாங்கிய விற்பனையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று (அக்டோபர் 18) விசாரித்த நீதிமன்றம், மதுரையில் அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது, அதுபோன்று காவல்துறையினரும் வரம்புகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share