660 இரவுகளில் ஒரு படம்!

Published On:

| By Balaji

கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கார்த்தி நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான தேவ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாமல் போனது. சுவாரஸ்யமற்ற திரைக்கதையே படம் கவனம் பெறாமல் போனதற்கான காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம் என்ற வெற்றிப்படத்தை வழங்கிய கார்த்தி உடனடியாக அடுத்த வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாராகிவருகின்றன. தங்கள் முந்தையப் படங்கள் மூலம் பெரும் கவனம் பெற்ற இயக்குநர்கள் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் தற்போது நடித்துவருகின்றனர். முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறும் இந்தப் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு முன்னதாகவே கார்த்தி மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் இணைந்து நடித்துவந்தார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படக்குழு டப்பிங் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. கைதி கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 60 இரவுகளில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். முக்கியமாக இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share