கணவன், மனைவியாக வாழும் தம்பதிகள் அவர்கள் வாழ்வில் குழந்தை பாக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட வயதிற்குள் தாயாகவும், தந்தையாகவும் ஆகிவிடும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேலே பெண்களுக்கு இயற்கையாக கருத்தரிப்பது மிகவும் கஷ்டமாக மாறிவிடும். செயற்கை கருத்தரித்தல் மூலம் தான் குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். அவ்விதமான பல நவீன மருத்துவ வசதிகள் தற்போது வந்துவிட்டன. ஏற்கனவே முதல் கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவான 13 வயது குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது திருமணம் செய்த அவர் சென்னையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் மீண்டும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதற்கான பலனும் அவருக்கு கிடைத்துள்ளது.
தற்போது அவருக்கு துபாயில் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். குழந்தை 2.25 கிலோ எடை உள்ளது. இப்பெண்ணுக்கு டாக்டர் ஜாக்ரட் நிர்மலா பிரசவம் பார்த்தார். ஆனால் தம்பதியின் பெயர் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு அரியானாவை சேர்ந்த தவிஞ்சர் கவுர் என்ற பெண் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றார். அதே போன்று தற்போது இவரும் குழந்தை பெற்று இருக்கிறார்.பொதுவாக 60 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெறுவது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் 40 வயதுக்கு பிறகு அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். உடலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதில்லை என்பதும் முக்கிய விஷயமாக இருக்கிறது.�,