Mவாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள்!

Published On:

| By Balaji

வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறக்க நேற்று (ஜனவரி 12) தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் இன்று(ஜனவரி 13) பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். பள்ளி வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம். வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட மாற்று வகுப்புகளும் நடைபெறும். மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம். மாணவர்களின் வருகையைக் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share